ஈரானில் போர் ஆரம்பித்தத்திலிருந்து குறைந்தது 243 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரானின் கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் பாடசாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

