சபை ஒத்திவைப்பு விவாதம்!

பாராளுமன்றம் மார்ச் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கு அமைய 2026 மார்ச் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல்  பி.ப 5.30 மணி வரை நடைபெறும்.  மார்ச் 04ஆம் திகதி புதன்கிழமையும் சபை கூடும்.  2026 மார்ச் 05ஆம் திகதி வியாழக்கிழமை    மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை மார்ச் 08ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *