‘Cutie Hansajaali’ திரைப்படத்தின் அடுத்த பார்வை!

திரையுலகில் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள “Cutie Hansajaali” குறும்படத்தின் அடுத்த பார்வை தற்போது வெளியாகியுள்ளது.
ஜேக்கப் எல் ஜெரோஷன் மற்றும் மிது ஆர் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், அதன் தொழில்நுட்ப நேர்த்திக்காக ஏற்கனவே சினிமா ஆர்வலர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
ஹரிபிரசாந்த் மனோகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். கதையையும் திரைக்கதையையும் ஜேக்கப் எல் ஜெரோஷன் வடிவமைக்க, மிது ஆர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
குறிப்பாக, சாம் நேசன் எடிட்டிங், ஒலி வடிவமைப்பு மற்றும் இசை ஆகியவற்றுடன், இன்றைய நவீன தொழில்நுட்பமான AI Supervisor ஆகவும் பணியாற்றியிருப்பது கூடுதல் சிறப்பு. சலனாவின் VFX காட்சிகள் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் பிரநீதன், டியூடர், டிலோ, ஹரிபிரசாத், ரூபன் புஷ்பகுமார, திவ்யா நிலா, ஸ்ரீ வாருணி, அபி ஆதித்யா, தினுஷ்கா, துர்கேஷ், சக்தியலிங்கம், வுதர்ஷன், உமேஷ், காளிதாசன் மற்றும் பிரேமச்சந்தர் நடித்துள்ளனர்.
பெயரிலேயே ஒருவித ஆர்வத்தைத் தூண்டும் “Cutie Hansajaali”, ஒரு மாறுபட்ட கோணத்தில் கதையைச் சொல்லவிருக்கிறது. தரமான தொழில்நுட்பக் கலைஞர்களும், திறமையான நடிகர்களும் இணைந்துள்ளதால் இக்குறும்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் முழுப்படமும் வெளியாகவுள்ள நிலையில், இந்த “Next Look” போஸ்டர் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *