யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட சைவசித்தாந்தத் துறையும், உயர் பட்டப் படிப்புகள் பீடமும் இணைந்து நடாத்தும் முதலாவது சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு – 2026 நேற்று வெள்ளிக்கிழமை (27.02.2026) காலை 09.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கூவர் கலையரங்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப் படிப்புகள் பீடப் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி தலைமையில் சிறப்புற ஆரம்பமானது.
மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மங்கல விளக்கேற்றல், நந்திக் கொடியேற்றல் மற்றும் திருமுறைப் பாராயணத்துடன் ஆரம்பமான நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறைத் தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன் நிகழ்நிலையில் கலந்து கொண்டு ஆதார சுருதி உரை ஆற்றினார்.

