டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.05 ரூபாவிலிருந்து 328.09 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலையும் 337.00 ரூபாவிலிருந்து 337.05 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய முக்கிய நாணயங்களுடனான மாற்று விகிதங்களிலும் சிறிய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *