‘மோட தரிந்து’ திரைப்படம் தற்போது தமிழில்- முட்டாள் தரிந்து!

சிங்களத் திரையுலகில் சமீபகாலமாக பெரும் வசூல் சாதனை படைத்து வரும் ‘மோட தரிந்து’ திரைப்படம், தற்போது ‘முட்டாள் தரிந்து’ என்ற பெயரில் தமிழ் ரசிகர்களுக்காக வெளியாகிறது.
திஸர இம்புலான இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், நாளை( 27) முதல் நாடளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான விசேட காட்சி அண்மையில் கொழும்பு ரியோ திரையரங்கில் திரையிடப்பட்டது.
இதில் திரைக்கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சிறப்புக் காட்சியில் கலந்துகொண்ட பிரபல நடிகரும் ஊடகவியலாளருமான எல்ரோய், படம் குறித்துப் பகிர்கையில்:
“மூன்று மணிநேரம் ஒரு திரையரங்கில் பார்வையாளர்களை கட்டிப்போடுவது சாதாரணமான காரியமல்ல. அதைத் தனது நுணுக்கமான இயக்கத்தால் சாத்தியமாக்கியுள்ளார் இயக்குனர் திசர இம்புலான. பின்னணி இசை மற்றும் பாடல்கள் என அனைத்தும் உலகத் தரத்தில் உள்ளன. ரசிகர்கள் தைரியமாகத் திரையரங்குக்குச் செல்லலாம்; உங்கள் பணத்திற்கும் நேரத்திற்கும் 100% உத்தரவாதம்!”
சிங்கள மொழியில் இருந்து தமிழுக்கு மிக நேர்த்தியாகவும் ரசிக்கும்படியும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
படம் முழுவதும் ரசிகர்கள் வாய்விட்டுச் சிரிக்கும் வகையிலான காட்சிகள் மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு மேலும் அன்றாட மன அழுத்தத்தைப் போக்க விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு சிறந்த மருந்தாக அமையும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திரைப்படக் கலை மீது ஆர்வம் கொண்ட அனைவரும் தவறவிடக்கூடாத ஒரு படைப்பாக ‘முட்டாள் தரிந்து’ உருவெடுத்துள்ளது என சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *