இலங்கைக்கு வெற்றியிலக்கு ஓட்டம்-169!

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கெதிரான வாழ்வா/சாவா குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை வெற்றி பெறுவதற்கு 169 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து, மகேஷ் தீக்‌ஷன (3), டுஷ்மந்த சமீர (3), டுனித் வெல்லலாகேயிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியபோதும் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெரின் 47 (26), கோல் மக்கொஞ்சியின் ஆட்டமிழக்காத 31 (23) மற்றும் றஷின் றவீந்திரவின் 32 (22), பின் அலென்னின் 23 (13) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *