நடிகர் பாரியின் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘ஜமா’ படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகர் பாரி இளவழகன் கதையின் நாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், நடிகை ரோஜா, ‘பரிதாபங்கள்’ கோபி, இஸ்மத் பானு , சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேஸில் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் யுவராஜ் கணேசன் மற்றும் சத்யா கரிகாலன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்றும் தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டு வருகிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *