பா.உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டம் வர்த்தமானியில் வௌியீடு!

1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம், 1982 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கச் சட்டத்தின் 09 ஆம் பிரிவு அல்லது 1990 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கச் சட்டத்தின் 09 ஆம் பிரிவின்படி ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமையுள்ள மற்றும் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருக்கும் எந்தவொரு நபருக்கும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்தும் அதற்குப் பின்னரும் ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் கடந்த (17) திகதி நடைபெற்றதுடன், அது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்திய நிலையில், தற்போது அது சட்டமாக வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *