இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது.
2nd Silambam World Cup & Traditional Arts Festival 2026 என்ற சர்வதேச மட்டப் போட்டி, World Union of Silambam Federation ஏற்பாட்டில், இந்தியாவின் Hosur நகரில் கடந்த 13, 14, 15 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
மொத்தம் ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், Sri Lanka Silambam Federation சார்பில் கலந்து கொண்ட இலங்கை அணி 29 தங்கப் பதக்கங்கள், 16 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 24 வெண்கலப் பதக்கங்கள் வென்று மொத்தப் பதக்க எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியை ஆசான் ரா. திவாகரன் தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தினார். வீரர்களின் ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் கடின உழைப்பின் பலனாக இந்த சிறப்பான வெற்றி இலங்கைக்கு கிடைத்துள்ளது.

