சருமத்திற்கு 4000 வருட பழமையான இயற்கை பியூட்டி ரகசியம்!

சருமப் பராமரிப்பில் இன்று ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஸ்கின் கேர் பொருட்களை வாங்குகிறோம். ஆனால், நம் வீட்டிலேயே கிடைக்கும்மிக எளிமையான – மிக சக்திவாய்ந்த ஒரு பொருளின் அருமையை நாம் மறந்து விட்டோம். அதுதான் முல்தானி மட்டி. “இன்றைய நவீன ஸ்கின் கேர் தயாரிப்புகளில் கூட, முல்தானி மட்டியில் இயற்கையாக உள்ள சில மூலக்கூறுகளை சேர்க்க முடியவில்லை” என்று மருத்துவர் கார்த்திகேயன் விளக்குகிறார்.

முல்தானி மட்டியின் வரலாறு

முல்தான் என்னும் கிராமத்தில் கிடைக்கும் ஒரு வகை களிமண் தான் முல்தானி மட்டி. பெரிய போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்திலேயே, ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து, பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஒரு விலைமதிப்பற்ற மண் இது.

ஆராய்ச்சி சொல்வது என்ன?

2019-ம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வுகள், முல்தானி மட்டியில் உள்ள வியக்கத்தக்க மருத்துவ குணங்களை வெளிச்சம் போட்டன. இதில் உள்ள முக்கிய மூலக்கூறுகள்:

  • Magnesium Oxide: சருமம் தொங்காமல், ஸ்கின்னை இறுக்கமாக வைத்திருக்கும்.
  • Iron Oxide: சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இயற்கையான க்ளோ கிடைக்க உதவும்.
  • Calcium Bentonite: ஸ்கின்னில் உள்ள நச்சுகளை வெளியேற்றும், சருமத்தை டீடாக்ஸ் செய்யும்
  • Silica: கொலாஜன் உற்பத்தியை தூண்டும், வயது முதிர்வு அறிகுறிகளை தள்ளிப்போடும்.

முல்தானி மட்டியின் மிகப்பெரிய அதிசயம்

முல்தானி மட்டியின் அற்புதமான தன்மை என்ன தெரியுமா? சருமத்தில் எது தேவையில்லாத எண்ணெய் (Excess Sebum), எது சருமத்திற்கு தேவையான ஹெல்தி ஆயில் என்று தானாகவே பிரித்தெடுக்கும் அறிவு இதற்கு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *