அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி, இடைக்காலத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.
இத்தேர்தலில் எதிரணியான ஜனநாயகக் கட்சியிடம் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது.
இந்த சூழ்நிலையின் காரணமாக WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88 அமெரிக்க டொலருக்கும் கீழ் குறைந்துள்ளது.
புதிய தரவுகளின்படி, இது சுமார் 9% வீழ்ச்சியைப் பதிவு செய்து 87.76 டொலராகப் பதிவாகியுள்ளது.
மேலும், ப்ரென்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 9%-க்கும் மேல் சரிந்து 93.61 டொலராகக் குறைந்துள்ளது.
இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சந்தித்த தோல்விக்கு ஈரான் உடனான போர்ச் சூழலே நேரடிக் காரணம் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார்.
துணை ஜனாதிபதியின் இந்த கூற்றைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இவ்வாறு வேகமாக சரிந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

