பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனால் வழங்கி வைக்கப்பட்டன.
மூதூர் – பாட்டாளிபுரம் பாமகள் அ.த.க பாடசாலையில் வைத்து சுமார் 100 மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள் நேற்று(10 ) வழங்கி வைக்கப்பட்டது.
கனடா – திருமுருகன் கோயில் நிதி அனுசரணையில் இவ் உதவியானது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் பிரகலாதன்,தமிழரசுக் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

