பட்டிப்பளை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது பிரதேச செயலாளர் திரு. சீ.சுதாகரன் ஏற்பாட்டில், இன்று (10) பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் க.பிரபு தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன், வைத்தியர் இ.சிறிநாத், பட்டிப்பளை பிரதேச தவிசாளர் கிரேஷ்குமார் மற்றும் பல அமைப்புகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
சட்டவிரோதமான மண் அகழ்வு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் கேள்விக்கான பதிலை பட்டிப்பளை பிரதேச தவிசாளர் 25% வீதமாக மண் அகழ்வு குறைக்கப்படுள்ளதாகவும் கருத்துக்களை முன்வைத்தார்.
மேலும், முறையற்ற தயாரிப்பான வடி சாராயம் தொடர்பான கேள்விகளை முன்வைத்து இதற்கான நடவடிக்கைகளையும் உரிய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டுமென கருத்துக்களை முன்வைத்தார்.

