மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான கௌரவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

 

இப் போட்டியில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(25) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் தலைமையில் காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

இப் போட்டியில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் 13 பேருக்கு பணப் பரிசில்களும் விளையாட்டில் கலந்து சிறப்பித்த 31 பேருக்குக்கும் மெடின் இன் முல்லைத்தீவு இலவச உணவுக் கொள்வனவு அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது.

 

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் மேம்பாடு, அவர்களுடைய தேவைகள், உரிமைகள், தொழில் முயற்சிகள், வாழ்வாதாரங்கள் மற்றும் சமகால சவால்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

 

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. எஸ். குணபாலன் (நிர்வாகம்), மேலதிக அரசாங்க அதிபர் திரு. எஸ். ஜெயக்காந்(காணி), மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *