தடைப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு!

நேற்று பெய்த பலத்த மழை காரணமாக புகையிரத சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடைக்கால பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் நாட்டில் பலத்த மழை பதிவானது.

இதில் கொழும்பில் 129 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் கன மழை பதிவான நிலையில் கொழும்பு மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டிருந்தது.

அதனால் அனைத்து வழித்தடங்களிலுமான ரயில் சேவைகள் பெரும் தாமதத்துடன் இயங்கியதுடன், அனைத்து ரயில் மார்க்கங்களிலும் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் புகையிரத சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *