கிண்ணியா காக்காமுனையில் சமாதான நல்லிணக்கம் வேலைத்திட்டம்!

Star construction A to Z work (farees)  நிறுவனத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தில் சமாதான நல்லிணக்கம் வேலைத்திட்டமாக சுதந்திர தினம் அன்று [04]  மாலை 3.30 மணி அளவில் கொண்டாடப்பட்டது. இதில் அல் ஹிதாயா சன சமூக நிலையம் , காக்காமுனை இளைஞர் கழகம் , பள்ளி நிர்வாகம், விளையாட்டு கழகம் , பொது மக்கள் ஆகியோர் இணைந்து செயல்பட்டார்கள்.

கௌரவ விருந்தினர்களாக கிண்ணியா பிரதேச செயலாளர் M.H.Hani , இளைஞர் சேவை அதிகாரி Jifry sir , start construction நிறைவேற்று பணிப்பாளர் H.L.M.Farees ஆகியோர் அழைக்கப்பட்டார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக கிராம அபிவிருத்தி சங்க தலைவர் M.H. Munawar, அல் ஹிதாயா சன சமூக நிலையத்தின் தலைவர் S.M.Naslim , காக்காமுனை இளைஞர் கழக தலைவர் H.L.M.Faahis, சமூக வலுவூட்டல் உத்தியோகத்தராக A.L.Hadheeja umma போன்றோர் கலந்து கொண்டனர்.

இதற்கு நிதி உதவி Star construction A to Z work (farees) நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *