முல்லைத்தீவு கடலில் நிலநடுக்கம் பதிவு!

முல்லைத்தீவு கடலில் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.​ அது 3.6 ரிக்டர் அளவுகோலாகும்.

நாட்டின் அனைத்து நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களிலும் நிலநடுக்கம் சனிக்கிழமை(31) இரவு பதிவாகியுள்ளது.

ஹொரொவ்பத்தான, ரோட்டவெவ, மொரவெவ, குச்சவெளி, கிண்ணியா, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *