சம்பியன்ஷிப் பட்டங்களுடன் நாடு திரும்பினார் தாவி சமரவீர!

11 வயதுக்குட்பட்ட உலக தரவரிசை மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, இன்று (26) அதிகாலை நாடு திரும்பினார்.

தாவி சமரவீர ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து சலாம் எயார் விமான சேவையின் OV-437 என்ற இலக்க விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பஹ்ரைனில் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற தொடரில் தாவி சமரவீர வெற்றி பெற்று, அதில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதேபோல், கட்டார் நாட்டின் டொஹா நகரில் ஜனவரி 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கனிஷ்ட மேசைப்பந்து தொடரின் 11 வயதுக்குட்பட்ட பிரிவிலும் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இன்னும் 10 வயதேயான தாவி சமரவீர, கொழும்பு கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியில் தரம் 06 இல் கல்வி கற்கும் ஒரு மாணவராவார்.

தாவி சமரவீரவின் பயிற்சியாளராக அவரது தந்தையான ஹசித சமரவீர செயற்படுகிறார். அவர் 11 வயதுக்குட்பட்ட மேசைப்பந்து வீரர்களுக்கான உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளமை விசேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *