லேயர் கட் ஒரு நாள் பயிற்சி பட்டறை!

அழகுக்கலை வளவாளர் திருமதி.நவநிதா ரகுநாதன் அவர்களின் ஏற்பாட்டில், லேயர் கட் ஒரு நாள் பயிற்சி பட்டறையானது நேற்றைய தினம் (25) கோட்டைக்கல்லாரில் இடம்பெற்றது.

இப் பயிற்சி பட்டறையின் வளவாளராக, ஏசியன்ஸ் சலோன் பிரைடல் & பியூட்டி அகாடமி (பிரைவேட்) லிமிடெட் உரிமையாளர் இம்மானுவேல் றொஷான் கலந்து கொண்டார்.

இவர் பயிற்றுவிப்பாளரகவும் (NVQ)தொழில்முறை அழகுக்கலை நிபுணராகவும்,சிகையலங்கார நிபுணர் மற்றும் மணப்பெண் அலங்கார நிபுணத்துவத்தில் சிகை அலங்காரம் மற்றும் அழகுகலை டிப்ளோமா, உயர் டிப்ளோமா பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்கள் மிகவும் தெளிவாகவும் பல புதிய விடயங்களை கற்றுக் கொண்டதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

– லுக்சிகா விமலாதித்தன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *