தனித்துவமான திரை நட்சத்திரங்களான அரவிந்த்சாமி – விஜய் சேதுபதி இணைந்து மிரட்டும் ‘காந்தி டாக்ஸ்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரம்மி ரம்மி ‘எனும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காந்தி டாக்ஸ்’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹயாத்ரி ,சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கரண் பி. ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ .ஆர் . ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் எதுவும் உரையாடல் நிகழ்த்தாமல் மௌனமாக தோன்றும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் – கியூரிஸ் – பிங்க் மூன் – மூவிமிலி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.