சமூக ஊடகங்கள் ஊடாக காலாவதியான கிரீம் வகைகளை விற்பனை செய்த இரு கடைகள் சுற்றிவளைப்பு

சமூக ஊடகங்கள் ஊடாக காலாவதியான கிரீம் வகைகைளை விற்பனை செய்து வந்த இரு கடைகளை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.

 

கொழும்பு இராஜகிரிய ஒபேசேகரபுர மற்றும் அம்பகஹ சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள இரு கடைகளையே பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.

 

இந்த இரு கடைகளின் உரிமையாளர், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கிரீம் வகைகளின் காலாவதி திகதியை மாற்றி அதனை சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை செய்து வந்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த இரு கடைகளிலும் இருந்த அனைத்து கிரீம் வகைகளையும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 

இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *