மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து இரண்டு குழந்தைகளுடன் வாவியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தந்தை வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றியதுடன் குழந்தைகளும் காப்பாற்றபட்ட பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் திங்கட்கிழமை (23) இரவு இடம்பெற்றுள்ளதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த நபர் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுடன் கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஒருவர் கண்டு உடனடியாக செயல்பட்டு குழந்தைகளை பறித்து எடுத்துக் கொண்ட நிலையில் தந்தை தற்கொலை செய்வதற்கு வாவியில் குதித்ததையடுத்து அங்கு மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக செயல்பட்டு அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
நொச்சிமுனை யைச் சேர்ந்த குறித்த நபரின் மனைவி வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் மனைவியின் சகோதரியின் அரவணைப்பில் 3 பிள்ளைகள் இருந்து வரும் நிலையில் சம்பவ தினமான இன்று மாலை 6.00 மணியளவில் மூத்த பிள்ளையை அங்கு விட்டுவிட்டு இரண்டாவது மூன்றாவது இரு பிள்ளைகளை அங்கிருந்து எடுத்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் ஏற்றி கொண்டு கல்லடி பாலத்துக்கு சென்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
மனைவியாரை மாமாங்கத்தைச் சேர்ந்த சப் ஏஜென்சி போலி ஆவணங்களை தயாரித்து ஓமான் நாட்டுக்கு அனுப்பியுள்ளதுடன் அவருக்கு அங்கு ஒரு வேலைகளும் வழங்காது ஒரு அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வருகின்றனர் அவர் கிழமையில் ஒரு நாள் கரைப்பதற்கு மாத்திரம் தொலை பேசியை வழங்குகின்றனர்.
எனவே அவரை மீட்க வேறு வழியில்லாமல் நான் தற்கொலை செய்து தான் குடும்பத்தை மீட்க முடியும் என்றதனால் இதனை செய்ததாக தெரிவித்தார்
இதையடுத்து காத்தான்குடி பொலிசார் பிள்ளைகளையும் குறித்த நபரையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை இன்று மாலையில் குறித்த பாலத்தில் பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் தாயாருடன் வந்த நிலையில் அவருடன் சண்டை பிடித்துக் கொண்டு பாலத்தில் இருந்து வாவியில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் அங்கு கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசார் அந்த சிறுமியை காப்பாற்றி ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

