கிழக்கு மாகாண விளையாட்டு விழா 2026இல் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய . பகிர்ஜன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த போட்டியில் 2.01 மீற்றர் உயரத்தைத் தாண்டி முதலிடத்தைப் பெற்ற அவர், புதிய கிழக்கு மாகாண சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் 2.00 மீற்றராகப் பதிவாகியிருந்த கடந்த 10 வருடகால சாதனையை முறியடித்து இந்தப் புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
இவரது வெற்றியானது மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
திறமையுடன் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தையும் புதிய சாதனையையும் தனதாக்கிய K. பகிர்ஜனுக்கு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

