கோறளைப்பற்று மத்தியில் அசுவெசும திட்டத்தின் கீழ் யுவதிகளுக்கு தையல் பயிற்சி ஆரம்பம்!

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அஸ்வெசும சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ், இளைஞர் யுவதிகளுக்கு NVQ 4 மட்டத்திலான தொழிற்பயிற்சிகளை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தையல் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்ட 25 யுவதிகளுக்கான பயிற்சி நிகழ்வும் பயிற்சி நிலையத்தின் திறப்பு விழாவும் அண்மையில் இடம்பெற்றன.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறகின் வழிகாட்டலில், உதவி பிரதேச செயலாளர் (பதில்) எச்.எம்.எம். பாரூகின் தலைமையில், புனாணை கிழக்கு ரிதிதென்ன கிராமப் பிரிவில் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட பொது முகாமையாளர் மைஷான், தலைமையக முகாமையாளர் எம்.எல்.ஏ. மஜீத், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம். தாஹிர், ஜே.எம். முனாஸ், திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர், NAITA பரிசோதகர், பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரஜா சக்தி தலைவர் பீ. பவூர்தீன், CBO தலைவர்கள், மகாவலி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சித் திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட யுவதிகளுக்கு தொழில்திறன் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், அவர்களின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தி சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான திறன்களை வளர்ப்பதற்கும் வழிவகுக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *