நீர்த்தேக்கங்கள் நிரம்பியதால் வான்கதவுகள் திறப்பு!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்தம் 23 பெரிய நீர்த்தேக்கங்களும், 15 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வழிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 23 பெரிய நீர்த்தேக்கங்களில் 11 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மனங்கட்டிய, ராஜங்கனய, யான் ஓயா, படகிரிய, லுணுகம்வெஹெர மற்றும் தெதுரு ஓயா உள்ளிட்ட 11 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, 15 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களில் இரண்டின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *