சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், மையோன் எடியுகேசன் எய்ட் அமைப்பின் அனுசரணையுடன் மூன்றாவது முறையாக இரத்ததான முகாம் இன்று (14) அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் எஸ்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இன, மத பேதமின்றி இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவும் குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் நோக்கில் சேகரிக்கப்பட்ட குருதிகள் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டன.
இதன்போது, வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் ஜே. நிரோஜன் உள்ளிட்ட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு குருதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
மேலும், அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், ஸூரா சபை உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
குறிப்பாக, பேரவையின் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குருதிக்கொடையாளர்களை அடையாளம் கண்டு அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

