திங்கட்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 9) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் விசேட கோரிக்கைக்கு இணங்க, அந்தந்த மாகாண ஆளுநர்களின் ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், திங்கட்கிழமை வழங்கப்படும் இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி சனிக்கிழமை அன்று பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமைபோல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *