நீதிமன்ற சேவைப் போட்டிப் பரீட்சை முடிவுகள் வெளியீடு!

நீதிமன்ற முகாமைத்துவ சேவையின் நீதிமன்ற எழுதுவினைஞர் தரம் III இற்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் இணையத்தளமான www.jsc.gov.lk என்ற இணையத்தளத்தில் இப் பரீட்சை முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான நேர்முகப் பரீட்சை 2026 நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு 12 இல் அமைந்துள்ள மேல்நீதிமன்ற வளாகத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *