வருணி போகஹவத்த உள்ளிட்ட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!

கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுப் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதான நீதிவான் சதுர திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விசாரணைகளை நிறைவு செய்து, அன்றைய தினம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கார் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும் அதன் குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும் பணம் கிடைத்த வழிமுறையை உறுதிப்படுத்த முடியாத நிலையில், வருணி போகஹவத்த கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும், அவருக்குச் சொந்தமான நவீன ரக கார் ஒன்றையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடியில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் குறித்த காரின் குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்தியுள்ளதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *