கனடாவின் டொராண்டோவில் ஒக்டோபர் 15 முதல் 18 வரை நடைபெற்ற உலகத் தமிழாய்வு மாநாடு 2026, உலகெங்கும் உள்ள தமிழறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை ஒன்றிணைத்தது.
“செயற்கை நுண்ணறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில், தமிழ் மொழி, பண்பாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்றன.
இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்று ஆய்வுக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இம்மாநாடு சர்வதேசத் தமிழறிஞர்களிடையிலான கல்விசார் தொடர்புகளையும் எதிர்கால ஆய்வுக் கூட்டிணைவுகளையும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

