மிரிஸ்ஸ கடலில் தத்தளித்த சுற்றுலாப் பயணி பாதுகாப்பாக மீட்பு!

மிரிஸ்ஸ கடற்கரையில் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, கடல் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட 44 வயதுடைய அயர்லாந்து நாட்டுப் பிரஜை ஒருவரை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் குறித்த சுற்றுலாப் பயணி கடல் நீரோட்டத்தில் சிக்கி கரையிலிருந்து தொலைவாக அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட கொட்டவில பொலிஸ் உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அவரைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிக்கு அதிகாரிகள் முதலுதவி சிகிச்சைகளையும் வழங்கியுள்ளனர்.

பொலிஸ் சார்ஜன்ட் மெண்டிஸ் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள் இந்த மீட்பு நடவடிக்கையில் பங்கேற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *