ஒரே ஆண்டில் போதைப்பொருட்களுடன் 12,000 சிறுவர்கள் கைது!

தற்போது முன்னெடுக்கப்படும் “நாடே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது சுமார் 12,000 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 11,970 சிறுவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 11,737 ஆண்களும் 233 சிறுமிகளும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனிடையே “நாடே ஒன்றாக” தேசிய நடவடிக்கை நாடு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், திட்டமிட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராகப் பாரிய வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக நாட்டிற்குள் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுப்பதற்குச் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *