‘காவன்திஸ்ஸ’ யானையின் முழு உருவச் சிலையை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் சியம்பலாங்கமுவ குளத்தின் ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சஜித் தலைமையில் அமைக்கப்பட்ட ‘காவன்திஸ்ஸ யானைகள் பாதுகாப்பு செயலணி’ மூலம் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இது, காவன்திஸ்ஸ தலைமை தாங்கிய கஹல்ல – பல்லேகல யானைக் கூட்டம் அடிக்கடி நடமாடும் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள அம்பன்பொல, கஹம்பிலியாவெட்டியாவத்தை பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் தோட்ட வளாகத்தில் நிறுவப்படவுள்ளது.
ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிலப்பரப்பு, குறித்த சிலை மற்றும் ஆராய்ச்சி நூலக வளாகத்தைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், மனித – யானை மோதலைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளுக்கான மையமொன்றை அமைத்தல் மற்றும் தற்போதைய,எதிர்கால இலங்கைச் சந்ததியினரின் நலனுக்காக யானைகள் மற்றும் யானைக் கூட்டங்களைப் பாதுகாப்பதை ஊக்குவித்தல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், காவன்திஸ்ஸ மீது அன்பு கொண்ட அனைவரையும் இந்த உயரிய நற்பணியில் இணையுமாறு சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

