ரூமஸ்ஸல ஜங்கிள் பீச் பகுதியில் சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்டிருந்த 20 வயதுடைய பிரெஞ்சு நாட்டு யுவதியிடம் அத்துமீறிய பாலியல் சேட்டை செய்ததாக சந்தேகிக்கப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேக நபர் இச்சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதிக்குச் சுற்றுலா வந்த ஒருவராவார்.
இச்சம்பவம் குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரெஞ்சு சுற்றுலா யுவதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபரை பொலிஸார் ஹபராதூவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று (01) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

