மோசமான வானிலையால் சுமார் 21,000 பேர் பாதிப்பு!

மோசமான வானிலை மற்றும் ‘அர்னாப்’ (Arnab) சூறாவளி காரணமாக, 5,800 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 21,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

இந்த தரவுகள் ஒக்டோபர் 23 முதல் நவம்பர் 01 வரையிலான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் 19 மாவட்டங்களில் உள்ள 137 பிரதேச செயலகப் பிரிவுகள் இந்த மோசமான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மோசமான வானிலையினால் 8 வீடுகள் முழுமையாகவும், 737 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

இதில் இரத்தினபுரி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவதாக, புத்தளம் மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *