முக்கோணத் தொடரின் இறுதியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்!

முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, போட்டியை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று (31) பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த முக்கோண ஒருநாள் தொடரின் ஆரம்பச் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி, அதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து முன்கூட்டியே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

சமீபகாலமாகத் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த இலங்கை அணி, இந்த முக்கோணத் தொடரில் மீண்டும் எழுச்சி பெற்று, வெற்றித் தாகத்தில் இருந்த இலங்கை ரசிகர்களுக்கு மறக்க முடியாத சில வெற்றிகளைப் பரிசளித்ததது.

இலங்கை அணி ஆரம்பச் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று, இங்கிலாந்து அணியின் கனவைத் தகர்த்து முன்கூட்டியே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இன்று இறுதிப் போட்டி நடைபெறும் லாகூர் மைதானம் இலங்கை அணிக்குச் சாதகமான ஒரு மைதானமாகக் கருதப்படுகிறது.

இலங்கை அணி இதுவரை இந்த மைதானத்தில் விளையாடிய 16 ஒருநாள் போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளது.

இறுதியாக லாகூர் மைதானத்தில் இலங்கை அணி விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தமையும் ஒரு சிறப்பு அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *