ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை !

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடும் மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (30) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன் கடும் மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *