யோஷிதவின் வழக்கு தொடர்பான மேலதிக சாட்சி விசாரணை ஆரம்பம் !

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையாகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிநடத்தலில் சாட்சி விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

730 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டு தெஹிவளை மற்றும் ரத்மலானை பகுதிகளில் அமைந்துள்ள 5 காணிகளை கொள்முதல் செய்ததன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் கூறி, சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *