ஏறாவூர் தன்னாமுனையில் தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது குழந்தை பலி!

20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

ஏறாவூர் தன்னாமுனை கிறிஸ்துவின் நிழல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயதும்; 2 மாதங்களை கொண்ட அக்விவ் விகான் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்

குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான திங்கட்கிழமை (26) பகல்11.00 மணியளவில் குழந்தை நித்திரையில் இருந்துள்ள போது தாயார் கிணற்றடியில் 20 லீற்றர் கொண்ட சுவர் பூச்சு (பெயின்) வாளியில் உடைகளை கழுவிக் கொடியில் காய விரித்துக் கொண்டிருந்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *