நாட்டில் நிலவிவரும் தொடர் மழைவீழ்ச்சியில் மேல்நாட்டு மற்றும் கீழ்நாட்டுக் காய்கறிகள் பலவற்றின் மொத்த விற்பனை விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
அதேவேளை, நிலவும் பொருளாதாரச் சூழலால் முட்டை மற்றும் கோழி இறைச்சிப் பயன்பாடு சுமார் 20 சதவீதம் வரை சரிவடைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மழையுடனான வானிலையினால் மரக்கறிகள் பாதிக்கப்பட்டுள்ளதே இந்த விலை அதிகரிப்பிற்கு பிரதான காரணமாகும் என மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தின் முன்னாள் பிரதம அமைப்பாளர் அனில் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலம் நெருங்குவதால் காய்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

