இன்றைய ராசிபலன்!

மேஷம்:
இன்று குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் மகிழ்ச்சி தரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், நீலம்

ரிஷபம்:
இன்று மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்:
இன்று மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கேற்ற வருமானம் கிடைக்கலாம். மற்றவர்களிடம் ரகசியங்களைப் பகிர்வதையும் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதையும் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்:
இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வாகனங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான விடயங்களில் தாமதம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்:
இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சற்று குறைவு ஏற்படலாம். பொருட்களை விற்பனை செய்வதில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். வியாபார விரிவாக்கம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி:
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பயணங்கள் ஏற்படலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்:
இன்று உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பிறரை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்கும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்:
இன்று மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான பயணங்கள் ஏற்படலாம். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர வாய்ப்புள்ளது. எதிர்ப்புகள் விலகி, எடுத்த காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

தனுசு:
இன்று மேற்கொள்ளும் காரியங்களில் தாமதங்கள் ஏற்படலாம். வயிறு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் கவனம் தேவை. புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். வீடு மற்றும் வாகனம் தொடர்பான விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 9, 3

மகரம்:
இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகத்தில் முன்னேற்றம் ஏற்படாமல் போகலாம். வியாபாரப் பயணங்களில் திட்டமிட்ட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமையுடன் செயல்பட்டு மாற்றுத் திட்டங்களைத் தயாராக வைத்திருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கும்பம்:
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் சில மனக்கவலைகள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

மீனம்:
இன்று தேவையற்ற வாக்குவாதங்களையும் பிறரை விமர்சிப்பதையும் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் முன்னேற்றம் காணலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *