ஞானசார தேரர் விடுதலை கோரி போராட்டம்: கூரிய ஆயுதத்துடன் வந்தவர் கைது!

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில், கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பிக்குகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு கூரிய ஆயுதத்துடன் வந்த நபர் ஒருவர் இன்று (22) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் கூரிய ஆயுதத்துடன் திடீரென பிரவேசித்த அந்த நபரால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *