கொலம்பியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து!

கொலம்பியாவின் நரீனோ மாகாணத்தில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 07 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.

நரீனோ மாகாணத்தில் உள்ள சான்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகராட்சியின் கிராமப்புற சேம்பெரோ பகுதியில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதாக நரீனோ மாகாண ஆளுநர் லூயிஸ் அல்போன்சோ எஸ்கோபர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சட்டவிரோத மற்றும் சிறு அளவிலான சுரங்கத் தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துவதற்காக, அவர்களை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு தேசிய அரசு, தேசிய சுரங்க முகவரகம் மற்றும் சுரங்க மற்றும் எரிசக்தி அமைச்சிடம் ஆளுநர் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதமும் நரீனோ மாகாணத்தின் பொலிகார்பா நகரில் இதேபோன்ற சுரங்க விபத்தில் 13 பேர் உயிரிழந்திருந்துள்ளனர். கொலம்பியாவின் கிராமப்புறங்களில் முறையான பாதுகாப்பு உட்கட்டமைப்புகள் இன்றி இயங்கும் ஒழுங்கமைக்கப்படாத சுரங்கங்களால் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *