பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை!

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை’ சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (20) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

குறித்த சட்டமூலத்துக்கு எதிராக இதுவரையில் 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *