நாட்டில் இன்று முதல் மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் சிஸ்டம் பிரைவட் லிமிட்டட்டின் (NSO) தலைமை நிர்வாக அதிகாரி, வலுசக்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை உறுதிப்படுத்தினார்.

அதற்கமைய மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையான காலப்பகுதியில், நான்கு வலயங்களாக ஒரு மணி நேரத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *