திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தில் பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்காக விவசாயிகள் வயல் நிலங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.
இதற்காக இயந்திரங்கள் மற்றும் மனிதவளங்களைப் பயன்படுத்தி வயல் நிலங்களை உழுதல், சமப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்பகட்டப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், உரிய காலத்தில் நெற்செய்கையை ஆரம்பிக்கும் நோக்கில் இந்த முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தம்பலகாமம் பிரதேசத்தின் பொருளாதாரத்திலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும் நெற்செய்கை முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

