ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

ஜனவரம புரவசியோ’ (Janawarame Purawasiyo) என்ற சிவில் அமைப்பின் உறுப்பினர்கள், கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருடர்கள்-தீயவர்கள்-போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் சூழ்ச்சிகாரர்களை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி இடம்பெறுகிறது.

கொழும்பு கோட்டையில் இருந்து பேரணியாக சென்று தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஒன்று திரண்டுள்ளனர்.

ஒரு குழுவினர் தற்போது ஜனாதிபதியை சந்திக்க செயலகத்துக்கு சென்றுள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *