ட்ரைபிட் பிட்னஸ் அகடமி” இன் உத்தியோகபூர்வ ஜேர்ஸி அறிமுக நிகழ்வு!

“ட்ரைபிட் பிட்னஸ் அகடமி” இன் உத்தியோகபூர்வ ஜேர்ஸி அறிமுக நிகழ்வு 2026.10.13 அட்டாளைச்சேனை “ஸாறா வீச் ஹவுஸ்” இல் இடம்பெற்றது.

“ட்ரைபிட் பிட்னஸ் அகடமி” இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆர்.நெளஸாட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத், மாவட்ட தடகளப் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜ்டீன், “நெஸ்ட் இன்டர்நெஸனல் கென்ஸ்ரெக்ஸன்ஸ்” கம்பனியின் பொறியியலாளர் என்.எம்.ஸப்னாஸ், அய்யலான் இன்டர்நெஸனல் பிரதிநிதி ஜே.எம்.நபாத், கிராம சேவை உத்தியோகத்தர் அஸ்லம் ஸஜா, “அஸாஸ் றைஸ் மில்” நிர்வாகப் பணிப்பாளர் யு.ஸிராஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, ஒற்றுமை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த எதிர்காலச் சந்ததியை உருவாக்குவதே இந்த அகடமியின் நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *