குடி பிரதிநிதிகளுடனான முதலாம் கட்ட கலந்துரையாடல் !

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் விசேட நம்பிக்கையாளர் சபைக்கும் குடி பிரதிநிதிகளும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்க்கிழமை (13) அஸர் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பாரம்பரிய குடிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

குடி பிரதிநிதிகளை முறையாக வழிப்படுத்தி, எதிர்காலத்தில் ஜனநாயக ரீதியிலும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறக்கூடிய வகையிலும் குடி மறைக்காயர்களைக் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளைப் பல கட்டங்களாக முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

அதன் முதற்கட்டமாக இன்று நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக எதிர்வரும் சனிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து, யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குடிகளின் உறுப்பினர்களைச் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களாகவும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இந்தச் செயற்பாடுகள் வக்பு சபையினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கும், சம்பந்தப்பட்ட யாப்பு விதிமுறைகளுக்கும் அமைவாக முறையாக முன்னெடுக்கப்படும். அனைவரினதும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, சமூகத்தின் நலனை முன்னிறுத்தும் ஒரு பொறுப்பான தெரிவு முறையை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் உள்வாங்கப்பட்டு எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்தச் செயற்பாடுகள் தொடர்பான மேலதிக தகவல்கள் உரிய நேரத்தில் அனைவருக்கும் அறிவிக்கப்படும்.

ஒற்றுமை, வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எமது சமூகத்தின் நலனுக்காக அனைவரும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் விசேட நம்பிக்கையாளர் சபையின் தலைவர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *